கிளிநொச்சி நகரில் ஆயுத முனையில் திருட்டு!

Print tamilkin.com in இலங்கை

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இத்திருட்டு சம்பவத்தில் மூவர் தாக்குதலுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடையாளம் காண முடியாத சிலர் வீட்டை சேதப்படுத்தியுள்ளதுடன், தம்மையும் தாக்கி நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது தாலி, சங்கிலி மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், திருட வந்தவர்கள் முகத்தினை மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.