அளம்பில் துயிலுமில்லத்தில் நேற்றுத் துப்பரவுப்பணிகள்!

Print tamilkin.com in இலங்கை

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்று இடம்பெற்றுள்ளன. துப்பரவுப்பணியில் கலந்துகொண்ட மக்கள், துயிலுமில்லத்தில் இருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.

இந்த துப்பரவுப்பணிகளை அந்தப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி மேற்கொண்டனர்.

அவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.