நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Print tamilkin.com in இலங்கை

நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூடிய விரைவில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறியிருந்தார். இதனை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக ஐதேக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச தலைமையில் இன்று காலை தொடக்கம் இந்த குதிரை பேரம் நடந்து வருவதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை 3 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என்றும் அவர் கீச்சகப் பதிவில் கூறியிருக்கிறார்.