நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 17.11.2018 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயம்

Print tamilkin.com in இலங்கை

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த கார் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, மேலும் இருவர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.