ரவை- சேமியா பாயசம் செய்வது எப்படி.

Print tamilkin.com in சமையல்

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ரவை- சேமியா பாயசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!


சமைக்க தேவையானவை
ரவை கால் கப்
பால் அரை கப்,
சேமியா அரை கப்,
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் தேவைக்கேற்ப,
சர்க்கரை ஒன்றேகால் கப்,
ஏலக்காய்தூள் சிறிதளவு.
நெய் அரை கப்,
உணவு செய்முறை : ரவை- சேமியா பாயசம்
Step 1.
முதலில் ரவையை வறுத்து ¼ கப் தண்ணீரில் வேகவிடவும்.பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவும் .

Step 2.
பின் வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள் .

Step 3.
பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்குங்கள்.