நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து ஏற்படலாம்!மகிந்த அமரவீர தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு உயிராபத்து ஏற்படலாம் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

சபாநாயகரே இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இலங்கையின் அரசமைப்பின்கீழ் பிரதமரை அல்லது அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகரிற்கு இல்லை. இதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன.

சபாநாயகர் நடுநிலையானவர், பக்கச்சார்பற்றவர். அவர் ஜனாதிபதி தெரிவிப்பதை விமர்சிக்க முடியாது எனவும் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.