ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தார் சபாநாயகர்!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்த தகவலை சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் ஜனாதிபதியால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அழைப்பினை சபாநாயகர் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.