கொழும்பில் ரணிலுக்காக படையெடுத்த மக்கள் கூட்டம்!

Print tamilkin.com in இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.