சபைக்கு ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் கூரிய ஆயுதங்களுடன் வந்தனராம்!

Print tamilkin.com in இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபைக்குள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்திருந்தனர் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து செல்லாத காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தில் பதற்றமும் அமளியும் ஏற்பட்டது.

சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு எழுந்து சென்றிருந்தால், இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.