யாழை உலுக்கி எடுத்த கஜா புயலின் தாக்கம்!

Print tamilkin.com in இலங்கை

யாழில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவு 2.30 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்திலும் அதிக பாதிப்புக்களை செலுத்தியுள்ள கஜா புயல் இலங்கையின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.

இதன்படி, தற்போது யாழ்ப்பாணத்தில் மிக கடுமையான மழை பெய்து வருவதாகவும், பலத்த காற்று வீசி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கஜா புயலின் தாக்கங்கள் சில ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் சேத விபரங்கள் குறித்து ஏதும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.