அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!

Print tamilkin.com in இலங்கை

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தடுப்பு காவலில் உள்ள 110 அரசியல் கைதிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்கார சமர்ப்பிக்கும் அமைச்சரவை பத்திரத்திற்கமைய அரசியல் கைதிகளை விடுப்பதற்கு அரசாங்கம் இணங்கினால் அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் நீக்கப்படும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது இராணுவத்தினருக்கு இழைக்கும் அநீதி என தென்னிலங்கை சிங்களவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.