யாழில் கடல் நீர் உள்வாங்குவதால் மக்கள் பெரும் அச்சத்தில்!

Print tamilkin.com in இலங்கை

கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் இருந்த நீர் உள்வாங்கி யதால் இந்த பகுதியில் மக்கள் பதற்றமடைந்திருந்தனர்.

இந்நிலையில், கஜா புயலின் தாக்கத்தால், குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியது. பின்னர் அந்த நிலைமை வழமைக்கு திரும்புகிறது. இதனால், எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களே இல்லை. பொதுமக்கள் இதுகுறித்த பெரிதுபடுத்திக்கொள்ள தேவையில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.