புதிய பிரதமரின் பதவி மற்றும் அமைச்சரவையின் அதிகாரம் போய்விட்டது: செல்வம் எம்.பி

Print tamilkin.com in இலங்கை

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மிக மோசமான நிலைப்பாட்டை மஹிந்த அணி வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனநாயக இடமான நாடாளுமன்றுக்குள் இன்று மிளகாய்த்தூள் தாக்குதல் போன்ற அசிங்கமான செய்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த செயற்பாட்டுக்கு நான் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மஹிந்தவுக்கு எதிராக சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய பிரதமரின் பதவி மற்றும் அமைச்சரவையின் அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இனி புதிய பிரதமரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும்.

ஜனாதிபதியின் கைகளிலேயே இனி அனைத்தும் உள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.