நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றில் இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

ராஜபக்ஷ கூட்டம் மிகவும் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டது. செங்கோலை நாடாளுமன்றிற்குள் கொண்டு வரவோ, சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

சபாநாயகர் கரு ஜயசூரிய அவைக்குள் வந்தபோது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் போது எதிர்க்கட்சியினர் கைகளை உயர்த்தி ஏதோ சைகை செய்ததனை காண முடிந்தது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை கொண்டு வந்ததாகவும், அது பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.