தெரிவுக் குழுவில் பெரும்பான்மை வேண்டும்: கருவுக்கு தினேஷ் குணவர்தன விசேட கடிதம்!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருவீர்கள் என தான் நம்புகிறோம் என தினேஷ் குணவர்தன எம்.பி. சபாநாயகர் கருஜயசூரியவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கத்துக்கு தாமதித்தாவது புதிய தெரிவுக் குழுவை அமைக்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மொத்தம் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில், தமக்கு ஏழு உறுப்பினர்களைப் பெற்றுத் தருமாறும் அவர் கோரியுள்ளார். ஏழு பேருடைய பெயர் பட்டியலையும் அரசாங்க தரப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.