இடைக்கால பட்ஜட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Print tamilkin.com in இலங்கை

இடைக்­கால வரவு- செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­காக பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்சரவையில் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற்றது.

இதன்போது அர­சாங்­கத்தின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மற்றும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை உள்­ளிட்ட விட­யங்களும் ஆராயப்பட்டுள்ளன.

அத்­துடன் திறை­சே­ரியின் செய­லாளர் உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் நிதித்­துறை உயர் அதி­கா­ரி­க­ளையும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்கு அழைத்து ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டினார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும், விரைவில் இடைக்­கால வரவு- செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­பது குறித்தும் அதனை நிறை­வேற்­றிக்­கொள்­வது தொடர்­பா­கவும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது பேசப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன்­போது இடைக்­கால வரவு- செல­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­காக பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.