வாயைப் பேணிக் கொள்ளுங்கள்: ஐ.தே.கவின் எம்.பி.க்களிடம் ரணில்!

Print tamilkin.com in இலங்கை

உயர் நீதிமன்றத்திலும் ஏனைய நீதிமன்றங்களிலும் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் தெரியாதபோது அது குறித்து கருத்துத் தெரிவிப்பதில் தவிர்ந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்தக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்த கருத்துக்களை அவதானித்ததன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.