ஐ.தே.க. எதிர்க்கட்சியானால் தனது பதவி பறிபோகும் என்ற பயத்தினாலேயே சம்பந்தன் ரணிலுக்கு ஆதரவு! - விமல் வீரவன்ச தெரிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியானால் தனது பதவி பறிபோகும் என்ற பயத்தினாலேயே இரா. சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் நாட்டை ஒப்படைத்தால் இன்னும் சில காலங்களில் நாடே இல்லாமற்போய்விடும். எனவே நாட்டைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.