மிருகங்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட வேண்டாம்:இப்படிக்கூறுகிறார் ரணில்

Print tamilkin.com in இலங்கை

மிருகங்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சிறிசேன – ராஜபக்ச கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தி இதனை நிரூபித்துள்ளோம், 121 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று பாராளுமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அது எங்களுக்கு பிரச்சினை இல்லை, பாராளுமன்றில் எமக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும், எமது சபாநாயகர் நேர்மையாக நின்ற காரணத்தினால் பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடிந்தது.

தனது மதத்தின் முதல் நூலை வீசி எறிகின்றார்கள் என்றால் அவர்கள் மனிதர்களா, பாராளுமன்ற உறுப்பினர்களா அல்லது மிருகங்களா? இவ்வாறானவர்களிடமா நாட்டை ஒப்படைக்க முடியும்?