காதலியை கொலைசெய்த காதலன்:வீடியோ வெளிவந்ததால் பரபரப்பு

Print tamilkin.com in இலங்கை

மொனராகலை – சுமேத வெவ பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த தினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.குறித்த கொலையுடன் தொடர்புடைய காணொளியே தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட யுவதியின் காதலர் அவரை நிலத்தில் வீழ்த்தி கழுத்தை நெறித்து கொலை செய்யும் காட்சி அருகில் இருந்த சிலரால், இவ்வாறு கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்ககூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக மொனராகலை காவற்துறையினர் தெரிவித்தனர்.