மௌனத்தை கலைத்த துமிந்த:என்ன சொன்னார் தெரியுமா!

Print tamilkin.com in இலங்கை

இதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க நேற்று தனது மௌனத்தை கலைத்துள்ளார்.“தற்போதைய முறையை நான் விரும்பவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காக எந்தவொரு கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட புதியதொரு சக்தியை கட்டியெழுப்ப நான் பணியாற்றுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது அடுத்த நகர்வு எந்தவொரு கட்சி எல்லைகளையும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது.2015 ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது போன்ற, தேசிய நலன்களை மனதில் வைத்து பணியாற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாடு முன்னோக்கிச் செல்வதற்கும், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குமான ஒரு புதிய அமைப்பு முறையை உருவாக்க எதிர்பார்க்கின்றேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதிக்குப் பின் இலங்கை அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் பல இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தமது தரப்பு நிலைப்பாட்டை வெளியிடாமல் இருந்தார்.

அவர் ஐ.தே.கவுக்கு தாவப் போகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பஸில் ராஜபக்ச நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தினார். இதையடுத்து, அவர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.எனினும், இதுவரை அமைச்சுப் பதவியை பொறுப்கேற்காத துமிந்த திசாநாயக்க, கடந்த 14ஆம் திகதிக்குப் பின் நடந்த எந்த நாடாளுமன்ற அமர்வுகளிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையிலேயே தாம் ஐ.தே.கட்சியா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா என்பதற்கு பதில் வழங்கியுள்ளார்.அதில், மைத்திரியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.