இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மாணவரொருவன் உயிரிழப்பு

Print tamilkin.com in இலங்கை

கடந்த 21 ஆம் திகதி பேருவளை, அல்-ஹுமைசரா பாடசாலையில் மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மாணவரொருவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவத் தலைவனான உயிரிழந்த மாணவன், ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் சீருடை தொடர்பில் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கிய போது இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த சிறுவனின் தலை, அருகில் இருந்த மேசையில் அடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் வீட்டிற்கு சென்ற குறித்த மாணவன் அன்று இரவு நோய் நிலமை அதிகரித்தால் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவன் ​நேற்று (25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

பேருவளை பகுதியை சேர்ந்த மொஹமட் தாரிக் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில், குறித்த மாணவனை தாக்கி காயமேற்படுத்திய 15 வயதுடைய மாணவனை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.