யாழில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி நாணையத்தாள்கள்:பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Print tamilkin.com in இலங்கை

யாழ் கொடிகாமம் , வரணி , மந்துவில்பிரதேசங்களில் 5000 மற்றும் 1000 மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களினை மந்துவில் பிரதேசத்தினை சேர்ந்த கள்ளநோட்டு கும்பல் ஒன்று புழக்கத்தில் விட்டுள்ளனர்.

தொடர்ந்தும் புழக்கத்தில் விடும் செயற்பாடு தொடர்கின்றதாகவும் இது தொடர்பான புலன் விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக யாழ் பெரும் குற்றதடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் வியாபாரிகள் விழிப்புடன் இருக்குமாறும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு யாழ் பெரும் குற்றதடுப்பு பொலிசார் வேண்டுகோள்கள் விடுத்துள்ளனர்.