சரணடைந்த ஆவா குழுவின் முக்கியஸ்தர்!

Print tamilkin.com in இலங்கை

ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் அசோக் என்ற இளைஞர் யாழில் இடம்பெற்ற பல வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன், ஆவா குழுவின் முக்கிய நபராக செயற்பட்டு வந்தார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த நபரை யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்குச் தப்பிச் சென்றதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குறித்த இளைஞர் இன்று (28) மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். சரணடைந்ததை தொடர்ந்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.