புத்தளம் நோக்கி சென்ற யாழ் இளைஞர்கள் கைது!

Print tamilkin.com in இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – புத்தளம் நோக்கி சென்ற வீல்ரோ கப் வாகனத்தை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது,

அவ் வாகனத்தில் பயணித்த புத்தளத்தை சேர்ந்த 20,25 வயதுடைய இரு இளைஞர்களையும், 13பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சாவுடன் வாகனத்தையும் கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.