இராணுவ வீரருக்கு வெடிவைத்தவர் யார்?ஓமந்தையில் பதற்றம்!

Print tamilkin.com in இலங்கை

ஓமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இன்று காலை 10 மணியளவில் வெடி சத்தம் கேட்டதையடுத்து,

அப்பகுதியை பார்ப்பதற்காக நான்கு இராணுவ வீரர்கள் சென்ற சமயத்தில் காட்டு பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிங்கரெயிமன் படையணியில் உள்ள பூனாவையை சேர்ந்த 40வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.