தேரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி கவலை!

Print tamilkin.com in இலங்கை

பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று தந்திருந்த வேளையில் அவர்களின் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்தார்.

இத் தேரர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்வதற்கு கட்டளையிட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி , அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.