பொது மக்கள் கலரி மூடப்பட்டதற்கான காரணத்தை வெளியிட்டார் சபாநாயகர்!

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றம் கூடும்போது சபை நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்க சிலர் தயார் நிலையில் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனாலேயே பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் பொதுமக்கள் கலரியும் மூடப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மதியம் 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமான போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த அதிருப்தி அடைவதாகவும், இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.