தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, ஐக்கிய ​தேசியக் கட்சி பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Print tamilkin.com in இலங்கை

இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 27, டிசம்பர் மாதம், 4 ஆம் திகதிகளிலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.