எதுவேண்டுமானாலும் செய்கின்றோம்; அகிலவிராஜுக்கும் வலை வீசிச்சு!

Print tamilkin.com in இலங்கை

ஆளும் தரப்பினர் ஆதரவு வழங்குமாறு கோரி தன்னையும் விலைபேசினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி ஆளும் கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எங்களது ஆதரவு தரப்பினர்களை விலைபேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (நேற்று) அதிகாலை எனக்கும் ஒரு அழைப்பு வந்தது. எது வேண்டுமானாலும் செய்கின்றோம், எமது தரப்புக்கு ஆதரவு தருங்கள் என மறுபுறம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வாறு மேலும் பலரை விலைபேசி வருகின்றனர்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தமது அலைபேசிகளை துண்டித்து, இருக்குமிடங்களை வெளியே கூறாமல் இருக்கின்றனர்” என அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.