இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைச்சரவைக்கு: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்!

Print tamilkin.com in இலங்கை

நிதியமைச்சு அடுத்த வருடத்திற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக மைத்திரி, மகிந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு அமைய அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும். தேசிய வர்த்தக கொள்கை ஒன்றை வகுக்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க அனுமதி கோரி தனது அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து வருவதாகவும் இதனை
தான் அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஆங்கிலத்தில்அச்சிடப்பட்டிருக்கும் இலங்கை, சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரண்டு வாரங்களுக்குள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிடப்படும் எனவும் அதற்கான உத்தரவை அமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்ற வேண்டும்.

தற்போது நாடாளுமன்றத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு அமைய மகிந்த அரசாங்கத்தினால், இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால், எதிர்வரும் ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட அரச செலவுகளுக்காக நிதியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.