சிறுமியின் காற்சட்டையில் ஹெரோயின்: இரு பெண்கள் பொலிஸாரால் கைது!

Print tamilkin.com in இலங்கை

4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறு வயது சிறுமியொருவரின் காற்சட்டையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 4 கிராம் நிறையடங்கிய 8 ஹெரோயின் பக்கெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

இந்த சம்பவத்தின்போது இரு பெண்களை கைதுசெய்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.