புதுக்குடியிருப்பு பகுதியில் தனியார் பேருந்து தீக்கிரை!

Print tamilkin.com in இலங்கை

புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பகுதியில் பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் வீதியில் சென்ற தனியார் பேருந்து ஒன்றே நேற்று இரவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து உரிமையாளர் அவருடைய வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் நேற்று இரவு பேருந்தை நிறுத்தி வைத்த பின்னர் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.