கத்தரிக்காய் ப்ரவுனீஸ் செய்முறை!

Print tamilkin.com in சமையல்

தேவையான பொருட்கள்

பெரிய கத்தரிக்காய் – 1
சொக்லட் சிப்ஸ் – 500 g
சுகர் ப்ரி சொக்லட் – 200 g
மேப்பிள் சிரப்(maple syrup) – 6 மேசைக்கரண்டி
வெண்ணிலா – 1 தேக்கரண்டி
முட்டை – 3
பாதாம் மா – 1 கப்
கொக்கோ பௌடர் – 1/4
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை

கத்தரிக்காய்களை எடுத்து கழுவி தோலை சீவி கொள்ளவேண்டும்.

தோல் சீவிய கத்தரிக்காய்களை இரண்டாக வெட்டி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளை நீராவியில் (steam ) அவிக்கவும் 20 நிமிடங்கள் அவித்து எடுக்கவும்.

அவித்த கத்திரிக்காயை சொக்லட் சிப்ஸ்,சுகர் ப்ரி சொக்லட் , மேப்பிள் சிரப், வெண்ணிலா சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.

பாத்திரம் ஒன்றில் முட்டை, பாதாம் மா, கொக்கோ பௌடர், உப்பு சேர்த்து கிளறி கலவை ஆக்கவும்.

கத்தரிக்காயுடன் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும் பின்பு சொக்லட் சிப்ஸ் சேர்க்கவும்.

அவனில் கலவை போட்டு மேலே சொக்லட் சிப்ஸ் கொஞ்சம் தூவவும். 350˚F (180˚C) வெப்பத்தில் 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

எக்பிளான்ட் ப்ரவுனீஸ் தயார்.