சற்றுமுன் கைதான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன!

Print tamilkin.com in இலங்கை

11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்படைகளின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் எந்த உத்­தி­யோ­கபூர்வ அறி­வித்­தலும் கிடைக்கவில்லை. சி.ஐ.டி.க்கு அழைத்து சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலி ஸ் மா அதி­பரோ, பொலிஸ் மா அதி­பரோ, பாது­காப்பு செய­லா­ளரோ எந்த அறி­வித்­தலையும் அனுப்பவில்லை என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி சி.ஐ.டி.யில் ஆஜராகிதிருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தாயர் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

நீதி மன்ற விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.