இரு போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்மட்டக்களப்பு நோக்கி விரையும் போலீஸ் தலமைகள்!

Print tamilkin.com in இலங்கை

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு போலீசார் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவதற்காக பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது

மேலும் இதுபற்றி தெரியவருவதாவது......
நேற்று வியாழக்கிழமை வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு போலீசார் இனத்தெரியா நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு அவர்களது ஆயுதங்களும் ஆயுததாரிகளினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை கை கால்கள் கட்டபட்ட நிலையிலே அவர்களது சடலம் மீட்கப்பட்டுள்ளது

இதை பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவே இக்குழு மட்டக்களப்பு நோக்கி விரைந்துள்ளது