வவுனியாவில் தொடர் மழை:குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம்

Print tamilkin.com in இலங்கை

வவு­னியா மாவட்­டத்­தில் பூம்­பு­கார் பிர­தே­சத்­தில் உள்ள வைரா­மூன்­று­மு­றிப்பு குளம் உடைப்­பெ­டுக்­கும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இரண்டு இடங்­க­ளில் ஏற்­பட்ட வெடிப்­புக் கார­ண­மாக 2 அடி நீர் வெளி­யே­றி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­சர அவ­ச­ர­மாக அதனை மறு­சீ­ர­மைக்­கும் பணி முழு­வீச்­சாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

வவு­னி­யா­வில் மூன்று நாள்­க­ளா­கத் தொட­ரும் மழையை அடுத்து குளத்­துக்கு நீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலை­யில் குளத்­தின் அணைக்­கட்­டுப் பகு­தி­யில் இருந்து நீர்க் கசிவு ஏற்­பட்டு அணைக்­கட்டு உடைப்­பெ­டுக்­கும் அபா­யம் காணப்­பட்­டது.

மாவட்­டச் செய­ல­ரின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டதைய­டுத்து மாவட்­டச் செய­லக உத்­தி­யோ­கத்­தர்­கள் , கம­நல சேவைத் திணைக்­கள அதி­கா­ரி­கள் குளத்தை நேரில் ஆராய்ந்­த­னர்.

உட­ன­டி­யாக தடுப்­புப் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சிய நிலமை காணப்­பட்­டமையில். கம­நல சேவைத் திணைக்­க­ளம் மற்­றும் மாவட்ட இடர் முகா­மைத்­து­வப் பிரி­வின் உத­வி­யு­டன் 4 ஆயி­ரம் வெற்­றுப் பைக­ளில் மண் நிரப்பி அணைக்­கட்­டைப் பாது­காக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.இந்­தப் பணி­யில் அந்­தப் பகுதி மக்­கள் மற்­றும் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­ட­னர்.