ஆயுதங்களுடன் ஆவாக் குழு:அலறும் யாழ்ப்பாணம்

Print tamilkin.com in இலங்கை

யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

இதேவேளை கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். குடாநாட்டில் ஆவா குழுவின் செயற்பாடு காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நவீன ரக ஆதயுங்கள் ஆவா குழு எழுச்சி பெரும் ஆபத்தான விடயம் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.