கூரை மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

Print tamilkin.com in இலங்கை

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Prison Prisoners Demonstrated

சிறைச்சாலை நடவடிக்கைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையை இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தமது ஆடைகளைக் கலட்டி சோதனையிடுவதாகவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் கூரை மீது ஏறியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 40 கைதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தவல்கள் தெரிவிக்கின்றன.