உப்பு தண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனம்

Print tamilkin.com in தொழில் நுட்பம்

இந்தியா திருப்பூரைச்சேர்ந்த அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். மேலும் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்கிறார்.

திருப்பூரிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இரு சக்கர வாகனத்தை இயக்கி மாநில அளவில் முதல் பரிசு பெற்றார்.

பெற்றோல்இ டீசல் போன்றவற்றுக்கான மாற்று எரிசக்தியாக உருவாக்கப்பட்டுள்ள இது பற்றி குறிப்பிடும்போது உலக வெப்பமயமாதல்இ சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கவனத்தில் கொண்டு தான் செயற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

தன்னுடைய திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லிட்டர் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சுமார் 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்பவர் உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முயற்சியில் 1 மாத காலத்திற்கும் மேலாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு 4 முறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறுகின்றார்.

மேலும் ஒரு நாள் ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தை நகர்த்திக்கொண்டு பெட்ரோல் என்ன தண்ணீரிலா ஓடுகிறது என்று விவாதித்து சென்றனர். அந்த உரையாடலே இதற்கான முதல்புள்ளி என கூறும் யோகேஸ்வரி இதை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் உதவமுன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.