வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இளைஞன் மீது கத்தி குத்து

Print tamilkin.com in இலங்கை

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வரும் குணலிங்கம் ஜோன்சன் 28 வயதுடைய இளைஞன் மீதே இவ்வாறு நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.