தாய் இறந்ததை தாங்கி கொள்ள முடியாத மகன் தற்கொலை:இதுவும் இலங்கையில் தான்

Print tamilkin.com in இலங்கை

குருணாகலில் தாய் உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நிக்கவரெட்டியில் தாயின் உடலை நல்லடக்கம் செய்த பின்னர் 62 வயதான மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.குறித்த மகன் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஷெல்டன் பீட்டர் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனியாக வீடு ஒன்றை கட்டி தாயின் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.100 வயதான தாய் உயிரிழந்த பின்னர் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.