ஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட Uber தலைமையகம்

Print tamilkin.com in இலங்கை

கொழும்பு, தாமரை தடாகத்திற்கு முன்னால் இன்று (22) காலை அகில இலங்கை கூலி வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

அனைத்து கூலி வாகன ஓட்டுனர்களையும் சுரண்டி அசாதாரணமான முறையில் அறவிடப்படும் நூற்றுக்கு 25 வீதமான கொமிஷன் பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிக்மி (Pick Me) ஓட்டுனர்கள் மற்றும் சாதாரண கூலி வாகன ஓட்டுனர் 1500 ரூபாவிற்கு செல்லும் பயணத்தை ஊபர் (Uber) ஓட்டுனர்கள் 700 ரூபாவான குறைந்த விலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அது இலங்கைக்கு மிகவும் மோசமான ஒரு நிலமை எனவும் கூலி வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊபர் நிறுவனத்தின் ஊடாக பணம் வெளிநாட்டிற்கு செல்வதாகவும் அதன் மூலம் இலங்கைக்கு எவ்விதத்திலும் நன்மை இல்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஊபர் தலைமையாகம் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாமரை தடாகத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.