சாதத்திற்கு உகந்த கருவேப்பிலை பொடி எப்படி செய்வது!

Print tamilkin.com in சமையல்

தேவையான பொருட்கள் கறிவேப்பிலை பொடி

கருவேப்பிலை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
சிகப்பு மிளகாய் – 8-10
துருவிய தேங்காய் –3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
குறிப்பு

கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.